கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜை
- பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு துர்க்கா அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- காலை 7 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு துர்க்கா அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து 8.5 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உற்சவர் அம்பாள் துர்க்கை அம்மனுக்கு 11 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம், வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், முருகன், நாகசரவணன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், பூமாலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.