கந்த சஷ்டி திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- இளநீர், பால், தயிர் மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- முருகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா–லித்தார்.
தருமபுரி
தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
குமாரசாமிப்பேட்டையில் சூரசம்கார விழா
தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது
ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி யது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு கள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான கந்த சஷ்டியை யொட்டி இன்று அதிகாலை யில் சாமிக்கு மஞ்சள், இளநீர், பால், தயிர் மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முருகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா–லித்தார். சிவசுப்பரமணிய கோவிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று இரவு அலங்கரிக்கப்–பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சூரபத்மணை முருகப்பெரு–மான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறு கிறது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி, அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.
இதேபோன்று தருமபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள விநாயகர் சிவசுப்ர–மணியர் கோவில், எஸ்.வி. சாலையில் உள்ள முருகன் கோவில், டிரசரி காலனியில் உள்ள முருகன் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள விநாயகர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று கந்த சஷ்டியை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி, அரூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.