உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

Published On 2022-06-09 08:16 GMT   |   Update On 2022-06-09 08:16 GMT
  • கால்நடைகளுக்கு குறைந்த செலவில் தீவனம் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
  • அட்மாதிட்ட பணியாளர்கள் தனலட்சுமி, கெத்சியாள் டயானா உள்ளிட்டோர், அட்மா திட்ட பணிகள் குறித்து விளக்கினர்.

திருப்பூர்,

கலைஞரின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில், திருப்பூர் மேற்குபதி, கணக்கம்பாளையம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு குறைந்த செலவில் தீவனம் தயாரிப்பது குறித்து, தொரவலூர் கால்நடை டாக்டர் நந்தகுமார் விளக்கினார்.தேனி வளர்ப்பு குறித்து தேனி வளர்ப்பு நிலைய பயிற்சியாளர் பார்த்திபன் விளக்கினார். விவசாயிகள், தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் வருமானம் பெறுமாறு வேளாண்துறை - அட்மா திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.துணை வேளாண் அலுவலர்கள் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர்கள் சரவணன், சந்தியா, உதவி தோட்டக்கலை அலுவலர் சுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அட்மாதிட்ட பணியாளர்கள் தனலட்சுமி, கெத்சியாள் டயானா உள்ளிட்டோர், அட்மா திட்ட பணிகள் குறித்து விளக்கினர்.

Tags:    

Similar News