உள்ளூர் செய்திகள்

ஆசிரியை கலைமதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நல்லாசிரியர் விருது வழங்கினார்.

ஸ்ரீகண்டபுரம் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

Published On 2022-09-08 10:13 GMT   |   Update On 2022-09-08 10:13 GMT
  • மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை, கைவினை பொருட்கள் போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
  • உயரிய விருதான நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவ ட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆர்.ஜி.கலைமதி.

இவர் கடந்த 32 ஆண்டு களாக ஆசிரியையாக சேவையாற்றி வருவதோடு, 20 ஆண்டுகளாக பாரத சாரண, சாரணியர் இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்த பயிற்சியில் தமிழகத்தின் பிரதிநிதியாகக் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், இவர் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் மாவட்ட சாரணிய பயிற்சி ஆணை யராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பல மாணவிகள் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி விருதுபெற உறுதுணையாக இருந்துள்ளார்.

இவர் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி தோட்டக்க லை, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

இவரின் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறையின் உயரிய விருதான நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

விருது பெற்ற ஆசிரியை கலைமதிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இக்பால், துணைத் தலைவர் ராமதாஸ், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags:    

Similar News