உள்ளூர் செய்திகள்

விவசாய நிலங்களில் தேங்கிய தண்ணீரை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

திருவெண்ணைநல்லூர் அருகே விவசாய நிலங்களில் தேங்கியதண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் பொன்முடி உத்தரவு

Published On 2023-10-18 08:53 GMT   |   Update On 2023-10-18 08:53 GMT
  • 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் வாய்க்கால் வழியாக வந்து ஏரி நிரம்பியது. இதனால் தி.மழவராயனூர் கிராம விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் பொன்முடி, ஏமப்பூர் ஏரி நீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு பின் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, நீர்வள த்துறை செயற்பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரி கள், விவசாயிகளிடம் ஆலோ சனை நடத்தினார். அதன் பிறகு விவசாய பயிர்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.புகழேந்தி, செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர், அய்யப்பன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தி.மு.க.ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான விசுவநாதன், ஒன்றிய குழுதலைவர் ஓம்சிவ சக்திவேல், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநி பக்தவச்சலு, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிமோகன்ராஜ், தேவிசெந்தில், தி.மு.க.நகர செயலாளர் பூக்கடை கணேசன்,பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, ஆவின் இயக்குனர் விஜயபா பு,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ்,மாவட்ட மருத்துவர் அணி அமை ப்பாளர் காவியவேந்தன், சிறுமதுரை செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News