உள்ளூர் செய்திகள் (District)

மாநகராட்சி கமிசனர் மகேஸ்வரி.


திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்

Published On 2023-04-05 08:32 GMT   |   Update On 2023-04-05 08:32 GMT
  • மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சியாக திண்டுக்கல்லை தரம் உயர்த்த பாடுபடுவேன்.
  • திண்டுக்கல் மாநகராட்சியில் பொறுப்பேற்ற முதல்பெண் கமிசனர் என்ற பெருமை யையும் பெற்றுள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சி கமிசனராக இருந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் பணி ஓய்வு பெற்று சென்றதையடுத்து புதிய கமிசனராக மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் பதவிஏற்று கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சிபெற்று பெண்கள் பிரிவில் மாநிலத்திலேயே முதல்இடம் பிடித்தேன். அதன்பிறகு 2014-ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த போது சிறந்த நகராட்சிக்கான விருதை பெற்றேன்.

2019-ம் ஆண்டு தர்மபுரி நகராட்சியில் ஆணையாள ராக பணிபுரிந்தபோதும் சிறந்த நகராட்சிக்கான விருதுபெற்றேன். 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பணிபுரிந்தபோது சிறந்த திடக்கழிவு மேலா ண்மைக்கான விருது பெற்றேன். பின்னர் சென்னையில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு மன்ற நடுவர் நீதிமன்ற செய லாளராக பணிபுரிந்தேன். தற்போது திண்டுக்கல் மாநகராட்சியின் கமிசனராக பொறு ப்பேற்றுள்ளேன்.

மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சியாக திண்டுக்கல்லை தரம் உயர்த்த பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சியில் மகேஸ்வரி 5-வது கமிசனராவார். மேலும் மாநகராட்சியில் பொறுப்பேற்ற முதல்பெண் கமிசனர் என்ற பெருமை யையும் பெற்றுள்ளார்.

Tags:    

Similar News