உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆணையர் எச்சரிக்கை

Published On 2023-11-04 08:01 GMT   |   Update On 2023-11-04 08:01 GMT
  • பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
  • மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தர விட்டார். அதன்படி நகராட்சி துப்புரவு அலு வலர் ரவீந்திரன் தலைமை யில் துப்புரவு ஆய்வாளர் சையது காதர், களப்பணி யாளர் மகேஸ்வரி, பசுவை வாரிய மேலாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சத்யராஜ், பாலகிருஷ்ணன், அன்புதுரை, தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர் பரிமளா, பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் ரோடு பகுதி யைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் ஆட்டோவில் ஒருமுறை பயன்படுத் தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஆட்டோவில் இருந்த 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வதோ அல்லது மொத்த மாக விற்பனை செய்வதோ தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக் கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags:    

Similar News