உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2022-10-19 08:34 GMT   |   Update On 2022-10-19 08:34 GMT
  • தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் பள்ளியில் படித்து வந்த 7-ம் வகுப்பு மாணவர் சீனு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்
  • போலீஸ் நிலையத்தை தீயிட்டு கொளுத்துவோம் என்றும், பொதுமக்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி

தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் படித்து வந்த 7-ம் வகுப்பு மாணவர் சீனு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக, அனைவரும் கலவரத்தில் இறங்குவோம் என்றும், போலீஸ் நிலையத்தை தீயிட்டு கொளுத்துவோம் என்றும், பொதுமக்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயன்ற தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ் என்பவர் வீடியோ ஆதாரங்களின்படி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வீடியோ பதிவுகளின் அடிப்படையில், இது போன்ற வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News