மயிலம் அருகே மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
- தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- . இதனை மயிலம் வட்டார கல்வி அலுவளர் மதன்குமார் தொடங்கி வைத்தார்,
விழுப்புரம்:
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மயிலம் அருகே உள்ள சித்தனி அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதும இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகள ஏந்தி சேர்ப்போம், சேர்ப்போம், அரசு பள்ளிகளிள் தமிழ் வழியில் மாணர்களை சேர்ப்பபேம் என கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னதாக சித்தனி அரசு நடுநிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், தேசிய மக்கள் நேய நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க புரவளருமான சித்தனி ஏழுமலை ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 பீரோ, மின்விசிறி ஆகியவற்றை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகதிர்காமன், துணை தலைவர் அமர்நாத், ஊராட்சி செயலாளர் முருகன், ஆசிரியர்கள் அருளப்பன், தட்சினாமூர்த்தி, பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.