உள்ளூர் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண கூடலூர் கல்வி மாவட்ட மாணவ, மாணவிகள் தேர்வு

Published On 2022-07-28 10:10 GMT   |   Update On 2022-07-28 10:10 GMT
  • வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
  • மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர், ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் ஊட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த போட்டியில் இறுதி சுற்றில் கூடலூர் முதல்மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி டியானி தொடர்ந்து 4 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் தகுதியினை பெற்றார்.

காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் கோகுல்தாசன் மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

மாணவிகள் பிரிவில் சக்கத்த நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி பவிக்க்ஷாவும், பாட்டவயல் நடுநிலைப் பள்ளியின் மாணவி அனிதா செபஸ்டியன் ஆகியோர் முறையே 2,3-ம் இடங்களை பிடித்து செஸ்போட்டியை காண தகுதி பெற்றனர்.

மாணவர்கள் பிரிவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாண வன் புகழேந்தி, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சரவன்குமார் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மாவட்ட உதவிதிட்ட அலுவலர் குமார் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி–களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.முதன்மை நடுவராக நீலகிரி மாவட்ட சதுரங்க அமைப்பின் துணை செயலாளர் ஜுனைஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், சுரேஷ் உள்ளிட்டோர் கல நடுவர்களாக பணி–யாற்றினார்.

Tags:    

Similar News