உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

உயர்கல்வி பயில கல்லூரிகளில் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கும் மாணவர்கள்

Published On 2022-06-14 05:48 GMT   |   Update On 2022-06-14 05:48 GMT
  • தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன.
  • பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது.

திருப்பூர்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்வுமுடிவுக்கு காத்திருக்கும் மாணவர்கள் அடுத்து காலடி எடுத்து வைக்க போவது கல்லூரிகளில் தான். மதிப்பெண் என்ன என்பதை யூகித்து தனியார் கல்லூரிகளில் ஏறி, இறங்கி விண்ணப்பங்களை வாங்கி மாணவர் பலர் உயர்கல்விக்கு தயாராகி வருகின்றனர்.

தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. பல கல்லூரிகளில் அட்மிஷனும் நடந்துள்ளது.இது ஒருபுறம் இருந்தாலும் அரசு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும், எந்த படிப்புக்கு எப்போது கவுன்சிலிங், அட்மிஷன், கல்லூரி படிப்புக்கான தேதி என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. காரணம், அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் அரசு கல்லூரியில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்.

திருப்பூரில் உயர்கல்வி கற்றுத்தரும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, உடுமலை அரசு கலைக்கல்லுாரி செயல்படுகிறது. பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது. இவை தவிர, திருப்பூர் குமரன் கல்லுாரி கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்குகிறது.காங்கயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட தாலுகாவில் அரசு கல்லுாரிகள் செயல்படுகிறது. அரசு கல்லூரிகளில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாளுக்கு (ஜூன் 23) ஒரு வாரம் முன்னதாக, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இருப்பினும் தேதி விபரங்களை, தமிழக அரசுகல்லூரி கல்வி இயக்ககம் தான் அறிவிக்கும் என கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News