உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று 1 முதல் 10-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி. 

பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ- மாணவிகள்

Published On 2022-06-13 11:14 GMT   |   Update On 2022-06-13 11:14 GMT
  • 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படடன.
  • உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர்:

தமிழகத்தில் கடந்த ஆண்டுகொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதன் பின்னர் கொரோனா தொற்று குறைய, குறைய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டன. இதற்கிடையே தேர்வு காலம் நெருங்கியதால் தேர்வுகள் நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படடன.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் போன்றவை அகற்றப்பட்டு வந்தன. இன்று காலை பள்ளி திறந்ததும் மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றும்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் பள்ளிக்கு வருகிற மாணவ-மாணவிகளை ஒவ்வொரு பள்ளி சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் தற்போது மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடந்து வருகிறது. இது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News