5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற மானியம் - வேளாண்மை துறை தகவல்
- திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கடந்த சுமார் 5 வருடங்களுக்கு மேலாக தரிசாக உள்ள தங்கள் நிலங்களை திருத்தி விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
- இத்திட்டத்தில் சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.
உடன்குடி:
திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவியக்குனர் வெங்கட சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கடந்த சுமார் 5 வருடங்களுக்கு மேலாக தரிசாக உள்ள தங்கள் நிலங்களை திருத்தி விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இத்திட்டத்தில் சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம், பிச்சிவிளை, வெங்கட்ராமானுஜபுரம், சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, சீர்காட்சி மற்றும் மணப்பாடு ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இதர கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
மேலும் தரிசு நிலங்களை திருத்தி சாகுபடி செய்யப்படும் பயிருக்கு ஏற்றபடிபிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்கசிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் மற்றும் துணை நிலை நீர்பாசனத் திட்டத்தின் கீழ்புதியதாக ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மற்றும் நீர் சேமிக்கும் தொட்டிஅமைக்க மானியமும் விதிமுறைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
சொட்டுநீர் பாசனம் அமைக்க ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 12.5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார்கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகநகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும்தரிசு நில அடங்கல், கணினி பட்டா ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மைதுறை அலு வலர்களை அணுகி பயன்பெறலாம்என வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கட சுப்பிரமணியன் கூறியுள்ளார்.