உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் சேதமான செட்டாப் பாக்ஸ் கருவிகள்.

நாகை கலெக்டர் அலுவலகத்தில் 'திடீர்' தீ விபத்து; பொருட்கள் சேதம்

Published On 2023-07-17 09:31 GMT   |   Update On 2023-07-17 09:31 GMT
  • குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
  • நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்து இருந்தனர்.

இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தை பார்த்தவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News