சூலூர் வாரச்சந்தையில் விவசாயிகளுக்கு தனி இடம் திடீர் போராட்டத்தால் முடிவு
- விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
- அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு தனி இடம்.
சூலூர்,
சூலூர் வாரச்சந்தையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் சண்முகம் தலைமையில் ஒன்று கூடினர்.
அப்போது வாரச்சந்தையில் விவசாயிகள் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாயிகளின் விலை பொருள்களை விற்பனை செய்ய சுங்கம் வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
வாரச்சந்தை சுங்க கட்டண வசூலிப்பாளர், விவசாயிகளுக்கு வார சந்தையில் தனி இடம் ஒதுக்கி தர வேண்டிய அதிகாரம் பேரூராட்சிககு உட்பட்டது.
சந்தையில் விற்பனை செய்யும் பொருள்களுக்கு சுங்கம் வசூலிக்கவே தான் இந்த சந்தையில் ஏலம் எடுத்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு குறைவான கட்டணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு மூட்டைக்கு 50 ரூபாய் சுங்க கட்டணமாக வசூலிப்பது கூடாது என தெரிவித்தனர்.
மேலும் வாரச்சந்தையில் விவசாயிகளிடம் வாங்கி விற்கும் விற்பனையாளர்களுக்கு இதனால் எவ்வித இட யூறும் ஏற்படாது என்றார்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரச்சந்தையில் கூடியதால் அப்பகுதிக்கு சூலூர் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மன்னவன், சூலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மதிமுக கோவை மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து அடுத்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகளுக்கு என சூலூர் வாரச்சந்தையில் தனியிடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்தர். இதனை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.