உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பெண்கள் திடீர் மறியல்

Published On 2023-06-04 09:04 GMT   |   Update On 2023-06-04 09:04 GMT
  • 30-க்கும் மேற்பட்டோர் சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
  • மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சி பட்டக்காரனூர் கிராமத்தில் அனிதா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊராட்சி சாலை அமைந்துள்ளது.

இந்த சாலை வழியாக தங்களது தோட்டங்களுக்கு செல்ல அனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது விவசாய தோட்டத்திற்கு செல்லும் சாலையை அருகில் உள்ள தனிநபர் ஒருவர் அது தன்னுடைய இடம் என கூறி அந்த வழியாக தங்களை செல்ல அனுமதிப்பது இல்லை என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் அனிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு சத்தி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் இரு தரப்பு ஆவணங்கள் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News