கரும்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம்:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலா ளர் குருசாமி தலைமை வகித்தார்.
விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் செல்வராஜ், துரைசாமி, சங்க கிளை நிர்வாகிகள் சம்பூர்ணம், சின்னத்தாயி, குமார், சக்திவேல், முருகே சன், ஆறுமுகம், குமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தங்கள் கோரிக்கை கள் அடங்கிய மனுவினை விவ சாயிகள் தாசில்தார் சண்முகவேலிடம் வழங்கி விட்டு சென்றனர்.