உள்ளூர் செய்திகள் (District)

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் சராமாரி புகார்

Published On 2023-12-02 10:07 GMT   |   Update On 2023-12-02 10:07 GMT
  • கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
  • கரும்பை உடனடியாக ஆலைக்கு கொண்டு வந்து அரவைக்கு செல்ல வேண்டும்.

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் 14 ந்தேதி கரும்பு அரவை பணிகள் துவங்க உள்ள நிலையில் , பாயிலர் நெருப்பு போட்டு கரும்பு அரவை துவக்க பணிக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டது.

இதையடுத்து கரும்பு விவசாயிகள் மற்றும் இயக்குநர்கள் ஆலோசனை கூட்டம் மேலான்மை இயக்குநர் யோகவிஷ்னு தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சர்க்கரை ஆலை சார்பாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணி களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஆலை முழுவதிலும் முட்செடிகள், புற்கள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் விஷபூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை அதிக அளவில் நடமா டுவதால் புதர்களை உடனே அகற்ற வேண்டும் என்றும், மேலும் கடந்த ஆண்டு அரவையின் போது சுமார் 5ஆயிரம் சர்க்கரை மூட்டைகள், கரும்பு பால் உள்ளிட்ட வைகளை வீணாக்கி யதாகவும் இதற்க்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என்றும், கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம் விவசாயாகளுக்கு ஆலை மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், ஆள் பற்றாக்குறை கரும்பு வெட்டு கூலி அதிகரிப்பு உரம் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும், ஆலை நிர்வாக சீர்கேட்டால் ஏற்படும் இழப்பு க்களை மறைத்து, ஆலை நட்டத்தில் இயங்கி வருவதாக பொய்யான தகவல்களை அதிகாரிகள் தெரிவித்து வருவதாக விவ சாயிகள் சரமா ரியாக குற்றம் சாட்டினர்.

மேலும் விவசாயத் தோட்டத்தில் வெட்ட ப்படும். கரும்பு உடனடியாக ஆலைக்கு கொண்டு வந்து அரவைக்கு செல்ல வேண்டும் ஆனால் நிர்வாக சீர்கேட்டால் கரும்பு வெட்டப்பட்டு நான்கு 5 நாட்கள் கடந்த பிறகு தான் அரவைக்கு அனுப்பப்படுவதாகவும், இதனால் கரும்பு எடை குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படுவதாகவும் இவற்றை எல்லாம் உடனடியாக சரி செய்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாதப்பன், வெங்கடாசலம், விவசாய சங்க தலைவர்கள் , நிர்வாகிகள், சர்க்கரை ஆலை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News