உள்ளூர் செய்திகள்
கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பழச் செடிகள் வழங்கல்
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழச்செடிகள் வழங்கப்பட்டது.
- விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்
திட்டத்தின் கீழ் இருக்கூர்,
குன்னத்தூர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், வட
கரையாத்தூர், சிறு நல்லிக்கோவில், சுள்ளிபா
ளையம், குப்பிரிக்காபா ளையம் ஆகிய கிராமங்க ளுக்கு பழப்பயிர் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு மா, கொய்யா மற்றும் எலுமிச்சை செடிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து தோட்டக்கலை துறையின் மூலம் பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வட்டார
தோட்டக்கலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.