உள்ளூர் செய்திகள்

விவேகானந்த கேந்திர பண்பாட்டுப் போட்டியில் சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் நர்சரி பிரைமரி பள்ளி சாதனை

Published On 2023-10-28 08:43 GMT   |   Update On 2023-10-28 08:43 GMT
  • போட்டிகளில் 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
  • மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

சுரண்டை:

தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திரம் சார்பில் நடைபெற்றது. இதில் ராஜேந்திரா விஸ்டம் நர்சரி பிரைமரி, மகரிஷி வேல்ஸ் பப்ளிக், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்,பாரத் வித்யா மந்திர், பாரத் மாண்டிசோரி, எஸ்.எம்.ஏ. மெட்ரிக், உள்ளிட்ட 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட ராஜேந்திரன் விஸ்டம் நர்சரி பிரைமரி பள்ளி மாணவி தமிழ் யாழினி கதை கூறுதலில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தார். இதே பள்ளியை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி ஒப்பித்தல் போட்டியில் 4-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ் ராம்,பள்ளி செயலாளர் சிவ டிப்ஜினிஸ் ராம் ,முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News