உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
- நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாரா தனையும், மாலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.