உள்ளூர் செய்திகள்

சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

வெள்ள நிவாரண முகாம்களில் ஆய்வு

Published On 2022-08-11 10:25 GMT   |   Update On 2022-08-11 10:25 GMT
  • முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
  • முகாமில் உள்ளவர்களின் உணவையும் பரிசோதனை செய்தார்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்று நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சுக்காம்பார் கிராமத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமை தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொன்டார். அப்போது சமுதாயக் கூடம் அருகில் கொள்ளிடத்தில் செல்லும் வெள்ள நீரை பார்வையிட்டு பின்பு சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்த்து சுகாதாரம் பற்றி கேட்டறிந்தார்.

பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் மகப் பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் நிர்மல் சென் உடனிருந்தார்.

அந்த ஊரில் பயன்படுத்தப்படும் குடிநீரையும், அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்த குடிநீரை எடுத்து பரிசோதனை செய்தார். முகாமில் உள்ளவர்களின் உணவையும் பரிசோதனை செய்தார்.

ஆய்வின் போது தஞ்சை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகளின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரேகா, நடமாடும் மருத்துவக் குழு டாக்டர் நவீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் ராமநாதன், ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News