உள்ளூர் செய்திகள்

கோவை நேரு விளையாட்டரங்கில் ரூ.6.55 கோடி மதிப்பில் சிந்தடிக் ஓடுதளம்

Published On 2023-11-02 09:18 GMT   |   Update On 2023-11-02 09:18 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
  • விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

கோவை,

கோவை வ.உ.சி. மைதானம் அருகே நேரு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் இருந்தது. கடந்த 2008-ல் அமைக்கப்பட்ட ஓடுதளம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஓடுதளத்தை சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. மேலும் விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தடிக் ஓடுதளம் பாதையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், தடகள விளை யாட்டு வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

சிந்தடிக் ஓடுதளம் தங்களின் பயிற்சி மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். மேலும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நேரு விளையாட்டு அரங்கின் ஓடுதளம் மற்றும் மைதானம் ஆகியவற்றை சீரமைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர்கள் கூறினர்.  

Tags:    

Similar News