நெல்லை புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்
- நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- இங்கு ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருப்பதால் உடனடியாக டிக்கெட் எடுக்க முடிவ தில்லை.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங் களுக்கும், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ்களில் செல்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய பஸ் நிலையத்தில் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், திருப்பதி, பாண்டிச்சேரி, ஈரோடு, வேளா ங்கண்ணி, ஊட்டி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் செல்வதற்கான பஸ்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருப்பதால் உடனடியாக டிக்கெட் எடுக்க முடிவ தில்லை. டிக்கெட் எடுப்பத ற்காக நீண்ட வரிசையில் காத்தி ருக்க வேண்டி உள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலகட்டங்களில் இங்கே முன்பதிவு செய்வதற்காக பயணிகள் மணிக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே புதிய பஸ் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கூடுதலாக மேலும் ஒரு கவுண்டரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.