தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி
- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
- சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சொற்பொழிவாற்றினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தனியார் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் இருபால் கல்லூரி மாணவர்கள் இடையே தமிழர்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் "மாபெரும் தமிழ்க் கனவு" என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் - நாகரீகமும், தமிழகத்தில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 1000 மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் "தமிழர் அறம்" என்ற தலைப்பின் கீழ் காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சொற்பொழிவாற்றினார்.
"கல்வி கடந்து வந்த பாதை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் பார்த்தி பராஜா சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் "கல்வி கடந்து வந்த பாதை" என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டனர்.
அதற்கு மாணவர்களை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை நீங்கள் சிறப்பாக கற்க வேண்டும்,
நெறிமுறைபடுத்தும் கல்வியை கற்க வேண்டும், பல்வேறு எடுத்துக்காட்டு களுக்கு சாதனையாளராக வர வேண்டும் என்ற அடிப்படையில் கல்வியை கற்க வேண்டும், ராமாயனம் மகாபாரதம் ஐம்பெறும் காப்பியங்கள் போன்ற இதிகாசங்களுக்கு நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிபடையில் பதில் உரையாற்றினார்.
மேலும், சொற்பொழிவு களில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ஆறுமுகம், ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.