உள்ளூர் செய்திகள்

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2024-11-06 08:38 GMT   |   Update On 2024-11-06 08:38 GMT
  • மணிகண்டன் கடந்த 3 ஆண்டுகளாக அனுசியாவை காதலித்து வந்தது தெரியவந்தது.
  • சம்பவத்தன்று அனுசியாவை கடத்திச் சென்று திருமணம் செய்வதற்கு மணிகண்டன் முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

நெல்லை:

நெல்லை டவுன் ரத வீதி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் சப்பானி என்ற அனுசியா (வயது 28). இவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு புறப்பட்ட அனுசியாவை அந்த வழியாக காரில் வந்த 4 பேர் கும்பல் கடத்த முயற்சி செய்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அனுசியா கத்தி கூச்சலிட்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பார்த்து ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த மேலப்பாளையம் போலீசார் காரில் வந்த 4 பேரை பிடிக்க முயற்சித்த நிலையில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் டவுன் விளாகத்தை சேர்ந்த மணிகண்டன் ( 34), செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தீஸ்வரர்( 22) என்பது தெரியவந்தது.

இதில் மணிகண்டன் கடந்த 3 ஆண்டுகளாக அனுசியாவை காதலித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று அனுசியாவை கடத்திச் சென்று திருமணம் செய்வதற்கு மணிகண்டன் முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அவரது கூட்டாளிகளான மாரிச்செல்வம் மற்றும் ஒரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News