உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம் : தலைமை ஆசிரியை உட்பட 3 ஆசிரியைகள் பணியிட மாற்றம்

Published On 2024-11-13 12:28 GMT   |   Update On 2024-11-13 12:28 GMT
  • இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலைமை ஆசிரியை புனிதா தெரிவித்தார்.
  • 3 பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் இன்று உத்தரவிட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் வாயில் தலைமை ஆசிரியை டேப் ( பிளாஸ்திரி) ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே நடந்த விசாரணையில் வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு செல்லும்போது மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும், அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பரப்பியதாகவும் தெரியவந்தது.

ஆனால் இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலைமை ஆசிரியை புனிதா தெரிவித்தார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அய்யம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் பெல்சி சுமாகுலேட் பெர்சி, முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் இன்று உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News