உள்ளூர் செய்திகள்
தொடர்மழை: காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 403 ஏரிகள் நிரம்பின
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் ஓய்ந்த பின்னரும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டு, விட்டு மழை கொட்டியது.
பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
இதில் 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.
இதே போல் 139 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 41 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.