நெம்மேலி ஆளவந்தாருக்கு 90லட்சத்தில் புதிய கோவில்- 57ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
- ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர்.
- அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு 1,054 ஏக்கர் நிலமும், மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானமும் வருகிறது. அதை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து வருகிறது. 1967ல் நெம்மேலி கடற்கரை பகுதியில் அவருக்கு கட்டப்பட்ட கோவில் மண்டபம் பழுதடைந்து விழும் நிலையில் இருந்தது.
ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர். இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.
இதை அடுத்து அரசு 90 லட்சம் ரூபாய் மதிப்பில் பாறை கற்களால் கோவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. பழைய கோவிலை இடித்து புதிய கோவில் கட்டுவதற்காக பழைய கோவிலை இடிக்கும் பணியை இந்து அறநிலையத்துறை துவங்கியது.