உள்ளூர் செய்திகள்
அம்பத்தூர் அருகே பெண் தகராறில் வாலிபர் மீது தாக்குதல்- 3 பேர் கைது
- எதிர்தரப்பினர் லட்சுமணன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர்.
- மண்ணூர்பேட்டையை சேர்ந்த சூரியன், அருண், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன்கார்த்திக்(21). ஏ.சி மெக்கானிக்கான இவர் அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அதே பகுதிைய சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயம் அடைந்த லட்சுமணன்கார்த்திக் மீண்டும் அந்த பெண்ணை பார்க்க வந்ததாகதெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் லட்சுமணன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக மண்ணூர்பேட்டையை சேர்ந்த சூரியன், அருண், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.