உள்ளூர் செய்திகள்
- கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் மாலூர் மற்றும் வி.கோட்டா ஆகிய பகுதிகளில் இருந்து பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது.
- கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து பாதியாக குறைந்ததால் பீன்ஸ் விலை திடீரென அதிகரித்தது.
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் மாலூர் மற்றும் வி.கோட்டா ஆகிய பகுதிகளில் இருந்து பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை தினசரி 1,200மூட்டைகளில் சுமார் 80டன் அளவுக்கு பீன்ஸ் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து பாதியாக குறைந்ததால் பீன்ஸ் விலை திடீரென அதிகரித்தது. இன்று 600 மூட்டைகளில் மட்டுமே பீன்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரித்து உள்ளதால் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கு விற்பனை ஆனது. அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120 வரை விற்கப்படுகிறது.