உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-26 09:37 GMT   |   Update On 2022-12-26 09:37 GMT
  • தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார்.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் பண்ணவயல் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ் (தெற்கு), சதீஷ்குமார் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார்.

இதில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட துணை தலைவர் போர்வாழ் கோவிந்தராஜ், மருத்துவர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தர்மதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யம்பெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

Similar News