நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் ரூ.6 சரிவு
- நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, பல்லடம், சேலம் உட்பட பல பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் பல்லடத்தில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் சேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கறிக்கோழி விலையில் கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறிக்கோழி விலை, ரூ.77 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதேபோல நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலையில் ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.67 ஆக இருந்த முட்டை கோழி விலை ரூ.72 ஆக உயர்த்தப்பட்டது.
ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த சில நாட்களாக 440 காசுகளாகவே நீடிக்கிறது.