உள்ளூர் செய்திகள்
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கடந்த 5-ந்தேதியே மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.
- வருகிற 15-ந்தேதி கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.
மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.
இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த வாரம் தெலுங்கானா செல்வது மட்டுமே இறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.