உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் வன்முறை- இதுவரை 329 பேர் கைது

Published On 2022-07-18 08:40 GMT   |   Update On 2022-07-18 09:17 GMT
  • கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
  • பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.

இந்த இறப்பிற்கு நீதிகேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிரொலித்தது. நேற்று திடீரென ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்னசேலம் நகரம் போராட்டக்களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.

இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News