உள்ளூர் செய்திகள்

கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் செய்த தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த்.

தனியாக பிரசாரம் செய்யும் தே.மு.தி.க.

Published On 2023-02-13 10:50 GMT   |   Update On 2023-02-13 10:50 GMT
  • தே.மு.தி.க.வினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீதி வீதியாக நடந்தே சென்று முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.
  • விஜய் பிரபாகர் வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே கடந்த 27-ந்தேதி முதல் பிரசாரத்தை தொடங்கினார். தினமும் காலை, மாலை கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் செய்து வருகிறார். தே.மு.தி.க.வினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீதி வீதியாக நடந்தே சென்று முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.

இது பற்றி தே.மு.தி.க நிர்வாகிகளிடம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளர்கள் களமிறங்கி ஓட்டு சேகரித்து வருகிறார்கள். ஆனால் எந்த கட்சியும் ஆதரவு இல்லாமல் தனியாக போட்டியிடுகிறீர்களே. உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் கொள்கையை மற்ற கட்சி களிடம் அடமானம் வைக்க விரும்பாததால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் வேட்பாளர் ஆனந்தை அறிவித்து உள்ளனர். அவரும் காலையும், மாலையும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எந்த கூட்டணி கட்சி ஆதரவு இல்லாமல் தனியாகவே நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாங்கள் தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

எங்களது இலக்கு வெற்றியை நோக்கி செல்கிறது. எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும், விஜய் பிரபாகர் வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

Tags:    

Similar News