உள்ளூர் செய்திகள்

கடலூரில் மாநகராட்சி வளாகத்தில் தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல்

Published On 2022-09-02 09:15 GMT   |   Update On 2022-09-02 09:15 GMT
  • மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பாரூக் அலி, தமிழரசன், கர்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர்.
  • கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் திடீ ரென்று கவுன்சிலர் பாரூக் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடலூர்:

கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 45 வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் காலை 10 மணிக்கு வந்ததால் வழக்கம் போல் கூட்டம் தொடங்கியது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பாரூக் அலி, தமிழரசன், கர்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். அப்போது கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் திடீ ரென்று கவுன்சிலர் பாரூக் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து பாரூக் அலியுடன் வந்த கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்து ஏன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டனர். அப்போது கவுன்சிலர் கணவர் செந்தில் மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. கவுன்சிலர் பாரூக் அலி தாக்கப்பட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தி.மு.க. கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News