உள்ளூர் செய்திகள்
பழவேற்காட்டில் இறால்- நண்டு விலை கடுமையாக அதிகரிப்பு
- கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
- குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.
பொன்னேரி:
பழவேற்காட்டில் முகத்து வாரம் மணல் சேர்ந்து அடைபட்டத்தால் அப்பகுதியை சுற்று உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
கடற்கரை அருகில் உள்ள கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால் ஏரி பகுதியில் பிடிபடும் நண்டு, இறால்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன. ஒரு கிலோ நண்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் இறால் கிலோ ரூ.500 முதல் 800 வரையும், மடவை மீன் ரூ.300 முதல் 500 வரையும் விற்பனை செய்யபடுகிறது.