உள்ளூர் செய்திகள்

தமிழ் வளர்ச்சி குறித்து பேசவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்புமணி சந்தித்தார்: ஜி.கே.மணி பேட்டி

Published On 2023-02-19 09:36 GMT   |   Update On 2023-02-19 09:36 GMT
  • முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
  • தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அன்புமணி மு.க.ஸ்டாலினை சந்தித்தார்

திண்டுக்கல்:

பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே.மணி இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழை வளர்க்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக வருகிற 21-ந்தேதி தாய்மொழி தினத்தன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ் குறித்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளும் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதில் வன்னியர்களுக்கு 10½ சதவீத இடஒதுக்கீடு, தமிழ் வளர்ச்சி, நீர் மேலாண்மை குறித்து மட்டுமே ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.

அப்போது மாநில பொறுப்பாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள் ஜான்கென்னடி, ஜோதிமுத்து, சிவக்குமார், மணி, திருப்பதி, வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News