பரந்தூர் கிராமசபை கூட்டத்தில் புதிய விமானநிலையத்துக்கு எதிராக மீண்டும் தீர்மானம்
- பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விளைநிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கு அதை சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.
பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.