உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் புனரமைக்கும் பணிகளை பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எச். ராஜா பார்வையிட்ட போது எடுத்தப்படம்.

ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்த விவகாரம்: தி.மு.க. அரசு மீது எச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

Published On 2023-08-08 07:44 GMT   |   Update On 2023-08-08 07:44 GMT
  • கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஸ்ரீரங்கம் கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
  • ஸ்ரீரங்கம் கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவு அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எச். ராஜா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் 56 நிலைகள் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது.

இதில் முன்னாள் இணை ஆணையர் ஜெயராமனுக்கு பெரும் பங்கு உள்ளது. ஆனாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் செய்துள்ள ஜெயராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஸ்ரீரங்கம் கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்து கோவில்கள் மீது அறநிலையத்துறைக்கு அக்கறை இல்லை.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் தாமரைக் கோலம் போட அனுமதி மறுத்த ஸ்ரீரங்கம் கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தி.மு.க. ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் போது கோவில்களில் உள்ள தங்கம், சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News