உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் நாய் குரைத்த தகராறில் 'டாட்டூ' கலைஞர் குத்திக்கொலை

Published On 2022-06-07 06:59 GMT   |   Update On 2022-06-07 06:59 GMT
  • விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அவரது மனைவி அமுதாவை தாக்கியதாக தெரிகிறது.
  • காஞ்சிபுரத்தில் நாய் குரைத்த தகராறில் ‘டாட்டூ’ கலைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் சரண்சிங். டாட்டூ கலைஞர். இவர் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டூ கடை நடத்தி வந்தார்.

இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஷ்ணு என்பவர் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அவரது மனைவி அமுதாவை தாக்கியதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்ததும் சரண்சிங் ஆத்திரம்அடைந்தார். அவர் தனது பெற்றோரை தாக்கியதை கண்டித்து விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணு, அவரது தாய் சித்ரா, தம்பி சிவா மற்றும் 3 நண்பர்கள் சேர்ந்து சரண்சிங் குடும்பத்தினரை கடுமையாக தாக்கினார். மேலும் கத்தரிக்கோல், ஸ்குரு டிரைவரால் சரண் சிங்கை குத்தினர். இதனை தடுக்க முயன்ற அவரது தந்தை அறிவழகன், தாய் அமுதா, சகோதரி சவுமியா ஆகியோருக்கும் குத்து விழுந்தது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விஷ்ணு, அவருடைய தாய் சித்ரா, தம்பி சிவா ஆகிய 3பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டில் உள்ள நாய் அதிகமாக குரைத்து உள்ளது. இதனை பக்கத்து வீட்டில் வசித்த சரண்சிங் கண்டித்து உள்ளார். மேலும் விஷ்ணுவின் பாட்டி, பாக்கு இடிக்கும் சிறிய உரலின் சத்தம் குறித்தும் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட மேதலில் சரண்சிங் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News