உள்ளூர் செய்திகள்

அரசு விரைவு பஸ்களில் செல்பவர்கள் சாப்பிட 51 உணவகங்கள் பட்டியல்

Published On 2023-05-24 08:57 GMT   |   Update On 2023-05-24 09:59 GMT
  • அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை, கழிப்பறை தூய்மையின்மை, பயன்படுத்த கட்டணம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
  • உணவு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை :

தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பஸ்களில் பயணிப்போர் உணவு அருந்துதல், இயற்கை உபாதைகளை கழித்தல் போன்றவற்றுக்கு நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

அங்கு அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை, கழிப்பறை தூய்மையின்மை, பயன்படுத்த கட்டணம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பயணிகள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக அவ்வப்போது உணவு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, போக்குவரத்து துறையின் உரிமம் பெறாத உணவகங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

எனவே, பயணிகள் அறியும் வகையில் பஸ் நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவக பட்டியலை வெளியிட வேண்டும் என தொடர் கோரிக்கையை சமூக அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது பஸ்களை நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற 51 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை அரசு பஸ் என்ற இணையதளத்தில் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News