வேலூர் ஜெயிலில் முருகன் ஜீவசமாதி போராட்டம்
- வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
- வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று காலைமுருகன் ஜெயிலில் உணவு சாப்பிடவில்லை. 7-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் ஜெயிலில் வக்கீல் புகழேந்தி முருகனை சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
வேலூர் சிறையில் இருக்கும் முருகனை சந்தித்தேன். அவர் யாரிடமும் பேசாமல் உணவு உண்ணாமல் "ஜீவ சமாதி" அறநிலை போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதிகாரிகளுக்கு தன்னை விடுதலை செய்ய விருப்பம் இல்லை. தனக்கு போராட உடலிலும் மனதிலும் சக்தி இல்லை என்று எழுத்து மூலம் தெரிவித்ததாக கூறினார்.
சிறைத்துறை அதிகா ரிகள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.