உள்ளூர் செய்திகள்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கலெக்டருடன் திடீர் சந்திப்பு

Published On 2023-10-25 10:42 GMT   |   Update On 2023-10-25 10:42 GMT
  • நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
  • விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

காஞ்சிபுரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்பட சுற்றி உள்ள 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவும் அமைக்கப்பட்டு போராட்டங்கள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் அக்குழுவைச் சேர்ந்த 15 பேர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்தனர்.

அப்போது விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரந்தூரில் பழமையான கட்டிடமாக இருந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் இடித்த கட்டிடத்தை திருப்பி கட்டி தர வேண்டும். நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும். விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News