மீஞ்சூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 20 கடைகளுக்கு அபராதம்- அதிகாரிகள் எச்சரிக்கை
- பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
- மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் சுமார் 712 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 20 கடைகளுக்கு அபராதம் விதித்து ரூ.26ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது. சோதனையின் போது இளநிலை உதவியாளர்கள் அன்பரசு, கருப்பையா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உடன் இருந்தனர்.