10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அம்பத்தூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
- அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விரிவுபடுத்தி இருமார்க்கத்திலும் செல்லும் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.
- பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதால் 17 அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் பொது நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை அம்பத்தூர், ஓ.டி.பஸ்நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பத்தூரில் கடந்த 20 ஆண்டுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டு உள்ள பாடி-திருநின்றவூர் சாலை விரிவாக்க பணியை விரைவுபடுத்த வேண்டும். கள்ளிக்குப்பம்-மேனாம்பேடு சர்வீஸ் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்.
அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விரிவுபடுத்தி இருமார்க்கத்திலும் செல்லும் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும். பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதால் 17 அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அம்பத்தூர் பஸ்நிலையத்தை மேம்படுத்தவேண்டும். அம்பத்தூர் முழுவதும் புதைவட மின்கம்பி அமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். மேலும், கோரிக்கைகள் குறித்து பேசினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.