உள்ளூர் செய்திகள்

மாணவி கிரிஜா.

கடலூரில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவி 479 மதிப்பெண் பெற்று தேர்ச்சி

Published On 2023-05-08 09:21 GMT   |   Update On 2023-05-08 09:21 GMT
  • மாணவி கிரிஜாவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தேர்வு எழுத ஊக்கமளித்தனர்.
  • பிளஸ்-2 கடைசி தேர்வின்போது தனது தந்தை இறந்த துக்கத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கிரிஜா தேர்வு எழுதினார்.

கடலூர்:

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி முடிவடைந்தது.

கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ்-2 மாணவி வேதியியல் தேர்வு எழுதினார். அப்போது மாணவி கிரிஜா தந்தை பழையவண்டிப் பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய தகவல் அறிந்த அவரது மகள் கிரிஜா பிளஸ்-2 கடைசி தேர்வின்போது தனது தந்தை இறந்த துக்கத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து தேர்வு எழுதினார். மாணவி கிரிஜாவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த நிலையில் இன்று பிளஸ்-2 முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில்கிரிஜா 479 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

Tags:    

Similar News