திண்டுக்கல்லில் போலி டாக்டர் மீது 6 பிரிவில் வழக்கு
- டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.
- ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த பவானி கணேசன் தனியார் ஆஸ்பத்திரி தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின்படி நலப்பணிகள் இணை இயக்குனரிடம் உரிமம் பெறவில்லை.
இங்கு டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. மேலும் ஆஸ்பத்திரிக்கு தொடர்பு இல்லாத மகப்பேறு மருத்துவத்திற்கான உபகரணங்கள், மாத்திரைகள் இருந்தன. ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.
அதனை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர். மேலும் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி மீது மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.