உள்ளூர் செய்திகள் (District)

சரக்கு வேன் மீது பஸ் மோதி நிற்கும் காட்சி


பூந்தமல்லி அருகே சரக்குவேன் மீது பஸ் மோதல்- 11 பேர் படுகாயம்

Published On 2022-07-26 07:43 GMT   |   Update On 2022-07-26 07:43 GMT
  • காஞ்சிபுரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது.
  • வேன்-பஸ் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி:

காஞ்சிபுரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி இன்று காலை தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அப்பகுதியில் உள்ள சிப்காட்டிற்கு செல்ல சரக்குவேன் ஒன்று சாலையை கடக்க முயன்றது.அந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் வேகமாக சரக்கு வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வேனை சிறிது தூரம் இழுத்து சென்று சாலை நடுவே இருந்த உயிர் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.

இதில் உயர் கோபுர மின் கம்பம் சாலையில் இருந்த பெரிய போர்டு மீது சரிந்தது. பஸ்சில் சிக்கிய சரக்குவேன் முழுவதும் நசுங்கியது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். சரக்குவேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து காரணமான அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெங்களூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வேன்-பஸ் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News